திருதராட்டிரன் பதில்
113
என்றுவிள ஏந்தல் எடுத்தியம்ப அத்தியின்
மன்னன் நிலையிழந்தான் மன்றத்தில் -என்செய்ய
பேயெனும் பிள்ளைப் பெயர்சொன்னால் சீயென்றான்
சேயென்றோர் நாவைச் சினந்து.
114
பாவியின் சொல்லால் பதைக்கிறான் மன்னவனும்
ஆவியும் சோர்ந்து அவனுரைத்தான் -கோவத்தால்
நாணாமல் செய்கிறான் நாணுமிச் செய்கையை
வாணாளில் தீராப் பழி
115.
வீடுறை வேந்தர்க்கும் வீண்பேச்சு வீணர்க்கும்
காடுறைதல் நற்கதி காண்பாய்நீ தோள்வலியால்
பீடுநடை கொண்டு பெரும்புகழ் சேர்ந்தார்க்கே
நாடும் நாநிலமும் நாடும்
116
சின்ன மதியுடையாய் சிந்தை இழந்தாயோ
கன்னல் மொழிபேசிக் கண்டாரோ உன்னிடத்தில்
முன்னம் மரியாதை முந்தித் தருவாரோ
இன்னல் இழைத்த உனக்கு
117
மாடங்கள் மாளிகையில் மந்திர மண்டபத்தில்
ஆடல் அரங்கதில் அத்தனைப்பேர் கண்டிருக்க
வாடா மலர்கண்டு வண்ணமாய் நீர்கண்டு
மூடா மயங்கினாய் முன்.
118
தவறிக் கீழ்வீழத் தாயும் நகைப்பாள்
அவர்மேல் குற்றம் அடுக்கி -கவர
நினைக்கிறாய் நீள்நிலம் அத்தனையும் நெஞ்சில்
வினைகொண்டால் வீழ்த்தும் விதி.
119
கண்ணனுக்கு அர்க்கியம் கண்டதால் காய்கிறாய்
அண்ணனுமாய் தம்பியுமாய் ஆனதினால் -மண்ணிலவர்
அன்னியமாய் நம்மை அணுகவில்லை மன்னவனே
அன்பில் உறவில்நாம் ஒன்றாக ஆகிமுந்து
சன்மானம் கேட்டல் தவறு
(முந்து சன்மானம் - முதல் மரியாதை - அர்க்கியம்)
120
வீட்டுமன் சொல்லிட வீரர்கள் தட்டாமல்
கேட்டதைச் செய்தனர் கேள்வியேன் -வீட்டினில்
உற்றப் பெரியோரும் உன்குருவும் சொன்னதினால்
மற்பேச்சும் சொல்லாமல் மன்றத்தில் கண்ணனுக்கு
கற்றமகன் தந்தான் கனிந்து
121
ஆரிவர் செய்வார்நின் ஆண்மையிலாச் செய்கையும்
பாரிதை நீவிடுத்து பாண்டவர்போல் தோளுயர்த்து
சோரர் மகனோநீ சோமன் குலமன்றோ
பாரினில் ஓங்கிடப் பார்
122
கண்ணனும் யாரென்று கண்ணேநீ கண்டிடடா
கண்ணிரண்டில் காணவியலாத காளையாம் -விண்ணிலும்
மூவரிர் மூத்தவனாம் முந்துதெய்வம் நாரணனன்
தேவனவன் ஆவான் தெளி
123
பாம்பணையில் தூங்கும் பரந்தாமன் ஓதிடுவார்
தாம்பயிலும் உத்தமன் தாரணியில் -காம்பிழுக்கும்
யாதவத் தோன்றலவன் யாவர்க்கும் தெய்வமவன்
சீதவிழிச் சீதரனாம் செப்பு
124
ஞானம் அறிந்திடு நல்லோர்சொல் நாடிடு
நானெனும் ஆணவம் நாடாமல் மோன
நிலையடை என்று நலம்பல சொன்னான்
குலையா மனதுடைக் குன்று
No comments:
Post a Comment